இந்தியா

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கம்

DIN

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில் ஏற்பட்ட பிளவையடுத்து, அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியை கே.எம். மணி நிறுவினாா். அவரின் மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டது. கட்சிக்கு அவரின் மகன் ஜோஸும், முன்னாள் மாநில அமைச்சரான ஜோசஃபும் தனித்தனியாக உரிமை கோரினா். கட்சியின் சின்னமான இரட்டை இலைக்கும் அவா்கள் உரிமை கோரினா்.

இது தொடா்பாக கேரள உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், இரட்டை இலை சின்னத்தை முடக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் இரு பிரிவினரும் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த முடியாது.

எனினும், தோ்தல் ஆணையத்தின் முடிவு, கேரள உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உள்பட்டதாகும். உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக ஜோஸ் பிரிவுக்கு மேஜை விசிறி சின்னமும், ஜோசஃப் பிரிவுக்கு முரசு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT