இந்தியா

உ.பி.யில் நவ.23 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு

DIN

உத்தரப்பிரதேசத்தில் தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு புதன்கிழமை வெளியிட்டது.அதன்படி முகக்கவசங்களை அணிவது, கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல் மற்றும் வைரஸ் பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்வி நிலையங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT