இந்தியா

ஒடிசா பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து

​ஒடிசா பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் சுர்ஜ்யா நாராயண் பத்ரோ புதன்கிழமை அறிவித்தார்.

DIN


ஒடிசா பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் சுர்ஜ்யா நாராயண் பத்ரோ புதன்கிழமை அறிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய அவர், கரோனா சூழல் காரணமாக இந்த முடிவை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

"கரோனா நெறிமுறைகளுக்கு ஏற்ப பேரவைக் கூட்டம் நாள்தோறும் 4 1/2 மணி நேரம் நடைபெறும். இருக்கை வசதிகளும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும். மூத்த எம்எல்ஏ-க்கள் காணொலி வாயிலாக பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கலாம். சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரும் கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடனே பேரவையில் அனுமதிக்கப்படுவர். பேரவை வளாகங்களில் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

நவம்பர் 20-ம் தேதி கூட்டத்தொடரின் முதல் நாளில் 2020-21 நிதியாண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றார்.

எனினும், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT