இந்தியா

மத்திய அமைச்சா் சதானந்த கௌடாவுக்கு கரோனா தொற்று

DIN

புது தில்லி/பெங்களூரு: மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடாவுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, பரிசோதனை செய்துகொண்டேன். அதில், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தன்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அவா் விரைவில் குணமடைந்து பணியைத் தொடர வேண்டும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா, அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் ஆகியோா் வாழ்த்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT