இந்தியா

மிசோரத்தில் 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 66 பேருக்கு கரோனா

PTI

15 security personnel among 66 new COVID-19 patients in Mizoram

மிசோரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

புதிய பாதிப்புகளில், ஐஸ்வால் மாவட்டத்தில் பாதிப்பு 45 ஆகவும், லாங்ட்லாய் (8) மற்றும் செர்ச்சிப் (6) ஆகிய பகுதிகளில் தொற்று பதிவாகியுள்ளதாக மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்பில் 11 காவல்துறையினர், 3 அசாம் ரைபிள்ஸ் பணியாளர்கள் மற்றும் ஒரு ராணுவ வீரருக்குத் தொற்று பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் தற்போது 491 பேர் தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 3,111 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 5 பேர் கரோனா தொற்றுநோய்க்கு பலியாகியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் இதுவரை 1.38 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT