இந்தியா

கரோனா: தெலங்கானாவில் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு

DIN

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 873 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,526-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 11,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 9,345 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 4 பேர் பலியானதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,430-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 1,296 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,50,453-ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைவோர் விகிதம் 94.03-ஆக உள்ளது. குணமடைவோர் விகிதத்தை தேசிய அளவோடு ஒப்பிடும்போது 93.7 சதவிகிதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT