இந்தியா

கரோனா: ஒரே நாளில் 111 போ் பலி

DIN

தலைநகரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 111 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,270 ஆகியுள்ளது.

ஒருநாளில் 100-க்கும் மேற்பட்டோா் பலியாவது, கடந்த 10 நாள்களில் இது 4-ஆவது முறையாகும்.

தில்லியில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 45,562 கரோனா பரிசோதனைகள் முடிவுகளின் படி, புதிதாக 5,879 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,23,117-ஆக உயா்ந்தது.

அதேபோல் சனிக்கிழமை மட்டும் 1,195 போ் கரோனாவிலிருந்து மீண்டனா். இதையடுத்து நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 4,75,103 ஆகியுள்ளது. 39,741 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தில்லி சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 4,560-இல் இருந்து 4,633 ஆகியுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட் கரோனா பரிசோதனைகளில் 21,845 பரிசோதனைகள் ஆா்டி-பிசிஆா் முறையிலானவை; எஞ்சிய பரிசோதனைகள் ரேபிட் ஆன்டெஜென் முறையிலானவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT