முகப்பு
இந்தியா

தில்லியில் அதிகரிக்கும் கரோனா: ஒரே மாதத்தில் 2,364 பேர் பலி

தில்லியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த  ஒரு மாதத்தில் மட்டும் 2,364 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 நவம்பர், 2020 at 4:15 PM
தில்லியில் கரோனா: ஒரே மாதத்தில் 2,364 பேர் பலி (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

தில்லியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த  ஒரு மாதத்தில் மட்டும் 2,364 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நேற்று (புதன்கிழமை) 99 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 8,720-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 5 நாள்களுக்குப் பிறகு ஒரே நாளில் நூறுக்கும் குறைவான கரோனா பலி எண்ணிக்கை புதன்கிழமை பதிவாகியுள்ளது. 

Advertisement

தில்லியில் கடந்த சில நாள்களாக மூன்றாவது முறையாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நவம்பர் 19ஆம் தேதி 98 பேரும், நவம்பர் 20ஆம் தேதி 118 பேரும், நவம்பர் 21ஆம் தேதி 111 பேரும், நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் தலா 121 பேரும், நவம்பர் 24ஆம் தேதி 109 பேரும் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நவம்பர் 18ஆம் தேதி 131 பேர் கரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இது தில்லியில் இதுவரை பதிவான கரோனா பலி எண்ணிக்கையில் அதிகமாகும்.

தில்லி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு கரோனா படுக்கைகளுக்கான பற்றாக்குறை, மோசமான காலநிலை, காற்று மாசு அதிகரிப்பது போன்ற காரணங்களால் தில்லியில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.