தில்லியில் மேலும் 5,475 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 5,475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 5,475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 5,475 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 5,51,262 ஆக அதிகரித்தது.
இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 91 உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,811 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றில் இருந்து 4,937 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,03,717 ஆக அதிகரித்தது.
தில்லி முழுவதும் 38,734 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,266 கரோனா மாதிரி சோதனைகள் பரிசோதிக்கப்பட்டதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.