பஞ்சாப் விவசாயிகள் பேரணி: தில்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளதால், தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளதால், தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரியாணா வழியாக தில்லி அடைந்து போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்த நிலையில், ஹரியாணா எல்லையான அம்பாலா பகுதியில் தடுப்புகள் மூலம் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் விவசாயிகளின் பேரணியையொட்டி தில்லி எல்லையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லையைக் கடந்து செல்லும் வாகனங்கள் முழு சோதனைக்கு பிறகே தில்லியினுள் அனுமதிக்கப்படுகிறது.