இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,185 பேருக்கு கரோனா

DIN

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. ஆனால் கடந்த சிலதினங்களாக அம்மாநிலத்தில் கரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று புதிதாக 6,185 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,08,550 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,898 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து இன்று ஒரே நாளில் 4,089 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,72,627 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 87,969 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
5,28,395 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT