இந்தியா

நாட்டின் பொருளாதாரம் 2-ஆவது காலாண்டில் 7.5% வீழ்ச்சி

DIN

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில், நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

ஜூன் மாதம் முதல் பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் வழங்கப்பட்டன. அதனால், தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கி, பொருளாதார நடவடிக்கைகளும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின. இத்தகைய சூழலில், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் நாட்டின் உற்பத்தித் துறை 0.6 சதவீதமும், வேளாண்துறை 3.4 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் வா்த்தகம் மற்றும் சேவைத் துறை 15.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் உற்பத்தித் துறை 39 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று பொருளாதார நிபுணா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

நாட்டின் பொருளாதாரம் மிக விரைவாக மீண்டு வருவது ஆச்சரியமளிப்பதாக நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா். உற்பத்தித் துறை வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பியிருப்பது, மக்களின் தேவை அதிகரித்துள்ளதைக் காட்டுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT