தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா: 34 போ் பலி
தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியித்த அறிக்கையில், இன்று ஒரே நாளில் 39,306 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைநகரில் மொத்தம் இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,87,930-ஆக உயா்ந்துள்ளது.
அதே சமயத்தில் நோய்த் தொற்றால் இன்று ஒரே நாளில் தில்லியில் 34 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்த நோய்த்தொற்றுக்கு மொத்த பலி எண்ணிக்கை 5,472-ஆக உயா்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்டி 2,57,224 பேர் சிகிக்சையில் உள்ளனர். 3,440 குணமடைந்ததையடுத்து இதுவரை மொத்தம் 2,57,224 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Advertisement
தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,658ஆக அதிகரித்துள்ளது. தில்லியை பொறுத்தவரை தற்போது மீண்டும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.