முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,702 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 13,702 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2020 at 9:48 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:00 PM


மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 13,702 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 13,702 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,43,409 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 326 பேர் பலியாகியுள்ளனர், 15,048 பேர் குணமடைந்துள்ளனர்.

அங்கு இதுவரை மொத்தம் 38,084 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,49,603 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 2,55,281 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

மும்பை:

மும்பையில் மேலும் 2,109 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 28,904 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 9,105 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் மொத்த பாதிப்பு: 2,14,445
மும்பையில் மொத்தம் குணமடைந்தோர்: 1,76,017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.