கேரளத்தில் ஒரே நாளில் 8,553 பேருக்கு கரோனா; 23 பேர் பலி
கேரளத்தில் இன்று ஒரே நாளில் 8,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:00 PM
கேரளத்தில் இன்று ஒரே நாளில் 8,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,29,886 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று 23 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 836 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரேநாளில் 4,851 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,44,471 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
தற்போதைய நிலவரப்படி 84,497 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.