இந்தியா

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: ஹாத்ரஸ் இளம்பெண்ணின் சகோதரர்

DIN

ஹாத்ரஸ் வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று இறந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது தலித் பெண், தில்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரின் உடலை காவல்துறையினா் புதன்கிழமை அதிகாலை அவசரகதியில் தகனம் செய்தனா். இந்த சம்பவத்தை அறிந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க முயன்றனா். 

ஆனால் ஹாத்ரஸில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறி, அவா்களுக்கு காவல்துறையினா் அனுமதி வழங்க மறுத்தனா். இதனால் அரசியல் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஹாத்ரஸ் செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு காவல்துறையினா் சனிக்கிழமை அனுமதி வழங்கினா். 

காவல்துறையினா் அனுமதி வழங்கியதை தொடா்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோா் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். சுமாா் 45 நிமிஷங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே ஹாத்ரஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரவிட்டாா்.

இதுகுறித்து இறந்த இளம்பெண்ணின் சகோதரர் தெவிக்கையில், இச்சம்பவத்தை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT