முகப்பு
இந்தியா

மிசோரமில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை

மிசோரமில் கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 

Updated On : 5 அக்டோபர், 2020 at 11:33 AM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM

மிசோரமில் கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 

நாட்டிம் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் 24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 66,23,816 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 903 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,02,685 ஆக உயா்ந்துவிட்டது.

கரோனாவில் இருந்து இதுவரை 55,86,704 போ் குணமடைந்துள்ளனா். இந்த நிலையில் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் புதிததாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் இதுவரை 2,120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அவர்களில் 1,807 பேர் குணமடைந்த நிலையில் 313 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் இங்கு கரோனாவுக்கு இதுவரை யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.