இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 2,154 பேருக்குத் தொற்று: 8 பேர் பலி

PTI

தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 2,154 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2.04 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், தெலங்கானா மாநிலத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,154 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2.04 லட்சம் பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஒரேநாளில், எட்டு பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1,189 ஆக உள்ளது. 

அக்டோபர் 06-ம் தேதி வரை 54,277 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஒட்டுமொத்தமாக, சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33.46 லட்சம் ஆகும். 

மேலும், இதுவரை நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக் 1,77 லட்சமாகும். இதையடுத்துமாநிலத்தில் மீட்பு விகிதம் 86.45 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 26,551 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT