முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மேலும் 3,144 பேருக்கு கரோனா தொற்று

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,144 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
3,144 new COVID-19 cases in Odisha
பகிர்:

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,144 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,144 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு  2,44,142-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 29,443 -ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து ஒரேநாளில் 3,455 பேர் மீண்டுள்ள நிலையில் 2,13,672 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

இதுவரை ஒடிசா மாநிலத்தில் 3,61,9,509 பர்சோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.