தில்லி: என்கவுன்டரில் 4 குற்றவாளிகள் படுகாயம்
தில்லியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 குற்றவாளிகள் படுகாயமடைந்தனர். துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தில்லியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 குற்றவாளிகள் படுகாயமடைந்தனர். துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தில்லி நகரின் பேகம்பூர் பகுதியில் லாரன்ஸ் பிஷ்னோய் கலா ஜாதி காவ் என்ற கும்பலை சேர்ந்த குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக தில்லி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு குற்றவாளிகளும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தொடர் துப்பாக்கிச்சூட்டில் நான்கு குற்றவாளிகளும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் இருந்த குற்றவாளிகளை காவல்துறையினர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், குற்றவாளிகள் பயன்படுத்திய காரில் இருந்து 70 தோட்டாக்கள், 4 துப்பாக்கிகள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு குண்டு துளைக்காத அங்கிகள், குண்டு துளைக்காத ஹெல்மெட் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
குற்றவாளி கும்பலை சேர்ந்தவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.