'காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கண்காணிப்பு அறை'
தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு அறை மூலம் தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மற்ற முகவர்களும் கண்காணிக்கப்படுவார்கள் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய், ''காற்று மாசுபாட்டை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் இந்த அறை திறக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த அறையை 24 மணிநேரமும் கண்காணிக்க அதிகாரப்பூர்வமாக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழு சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். காற்றின் வேகம், ஒலியின் அளவு, மாசுபாடு அளவு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக மூன்று திரைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் திரை காற்றின் வேகத்தை கண்டறிந்து அளவிடும் வகையிலும், இரண்டாவது திரை தில்லியில் உள்ள 13 சிவப்பு மண்டலப் பகுதிகளை கண்காணிக்கவும் வைக்கப்பட்டுள்ளன.
நாசா, இஸ்ரோ போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் தகவல்களை சேகரிக்கவும், மற்ற மாநிலங்களின் மாசுக்கட்டுப்பாட்டு அளவை தெரிந்துகொள்ளவும் மூன்றாவது திரை வைக்கப்பட்டுள்ளது'' என்று அவர் கூறினார்.