வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்தியா

வேளாண் சட்ட எதிர்ப்பு: நெடுஞ்சாலையை முற்றுகையிட்ட விவசாயிகள்

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் விவசாயிகள் அமந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். 

ஏற்கனவே வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காலவரையற்றை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT