அருணாசலில் 12 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு : இன்று 279 பேருக்குத் தொற்று
அருணாசலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 279 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
அருணாசலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 279 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அருணாசலில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அருணாசல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று புதிதாக 279 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,760-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,860 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். புதிதாக 198 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 8,877-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 75.48 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 2 பேர் இந்தோ - திபெத் எல்லைக் காவலர்கள், 4 பேர் மாநில காவல் துறையை சேர்ந்தவர்கள், ஒருவர் அசாம் ரைபிள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,858 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், மொத்த இதுவரை 2,71,035 சோதனைகள் மேற்கொண்டுள்ளது.