கரோனா தொற்று: சிவசேனா முன்னாள் எம்.எல்.ஏ. பலி
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிவசேனா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கோர் சனிக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிவசேனா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கோர் சனிக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் கேட் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக 2014 முதல் 2019 வரைப் பணியாற்றியவர் சிவசேனா கட்சியின் சுரேஷ் கோர். இவர் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் கோர் புணே ரூபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.