இந்தியா

'கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்தாலும் இறப்பு விகிதம் குறைவு'

DIN

கேரளத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனினும் கரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரோனா பரவல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. எனினும் இறப்பு விகிதம் 0.36 சதவிகிதமாகவே உள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிராக சுகாதாரப் பணியாளர்களின் ஓய்வற்றப் பணி மகத்தானது. சுகாதாரப் பணியாளர்களின் முயற்சியால் மட்டுமே தொற்று பரவல் அதிகரித்தாலும், இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது.

மக்கள் கரோனா நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், இறப்பு விகிதத்தை குறைத்து பலரது வாழ்வு காக்கப்பட்டுள்ளது.

இறப்பு விகிதம் 0.4 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது உலகத்திலேயே மிகச்சிறந்த தடுப்பு பணியாளர்களால் மட்டுமே சாத்தியப்படும்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT