நேபாளத்தில் 2-வது அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி
நேபாளத்தில் கல்வித்துறை அமைச்சர் கிரிராஜ் மணி போகரேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கல்வித்துறை அமைச்சர் கிரிராஜ் மணி போகரேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கரோனா தொற்றுக்கு ஆளான இரண்டாவது அமைச்சரவை அமைச்சர் இவராவார்.
லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் சனிக்கிழமை மாலை படான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போகரேல், பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து, தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சகத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று, நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் தன்னை சமீபத்தில் நேரில் சந்தித்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் யோகேஷ் பட்டராய் சனிக்கிழமை தெரிவித்திருந்தாா்.
மேலும், தற்போது கல்வித்துறை அமைச்சர் கிரிராஜ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.