இந்தியா

தில்லியில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை

DIN

தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல்  மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை விதித்து தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசுபாடை காட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தில்லி நகரில் பல்வேறு இடங்களில் காடுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் காற்றின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தில்லியில் ஆ.கே.புரம், ஆனந்த் விஹார், வாசிபூர் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனால் தில்லியில் இன்று (வியாழக்கிழமை) முதல் அவசரத் தேவைகளைத் தவிர பிற பயன்பாட்டுக்கு ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பெரிய கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தில்லியில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சாலையோரம் குப்பை மற்றும் மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT