இந்தியா

பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சு: 'இந்தியா எந்த தகவலும் அனுப்பவில்லை'

PTI


புது தில்லி: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை முற்றிலும் மறுத்துள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர விருப்பம் தெரிவித்து புது தில்லியிலிருந்து தகவல் வந்திருப்பதாக பிரதமர் இம்ரான் கானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல் என்றும், பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுவது போன்ற தகவல் எதையும் நமது தரப்பில் இருந்து அனுப்பவில்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்வதாகவும் இந்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்தியா விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்பியிருப்பதாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யூசுஃப் கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அனுராக் ஸ்ரீவஸ்தவா பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT