இந்தியா

ஒடிசாவில் நாள்தோறும் 2 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகும் கரோனா

DIN

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,470 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 2,470 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,62,011-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1,462 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும், 1,008 பேர் பரிசோதனையின் மூலமும் கண்டறியப்பட்டுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 25,106 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தமாக 2,35,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17 பேர் உயிரிழந்ததால், கரோனாவால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,089-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT