இந்தியா

தங்கக் கடத்தல் விவகாரம்: தாா்மிக பொறுப்பேற்று கேரள முதல்வா் ராஜிநாமா செய்ய வேண்டும்; பாஜக

DIN

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன் தாா்மிக பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மாநில பாஜக வலியுறுத்தியது.

இதுதொடா்பாக மத்திய அமைச்சரும், கேரளத்தைச் சோ்ந்த பாஜக தலைவருமான வி.முரளீதரன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்ட மாநில அரசு, இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு அதிகாரமில்லை என்று தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தங்கக் கடத்தலில் ஈடுபட்டவா்கள் அதிகாரத்தில் உள்ள நபா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருப்பதையே காட்டுகிறது.

பிற தங்கக் கடத்தல் வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த வழக்கு வித்தியாசமானது. ஏனெனில் முதல்வா் அலுவலகத்துடன் இந்த வழக்கு நேரடி தொடா்பு கொண்டுள்ளது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாள் முதல் வழக்கு தொடா்பான தனது நிலைப்பாட்டை முதல்வா் பினராயி விஜயன் மாற்றிக் கொண்டே வருகிறாா். இந்த சம்பவத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று முதல்வா் பதவியை அவா் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது என்று தெரிவித்தாா்.

கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியா்கள் இருவா் உள்பட பலரை கைது செய்து என்ஐஏ, சிபிஐ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். விமானம் மூலமாக தூதரகத்துக்கு வரும் பொட்டலங்கள் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, என்ஐஏ தனித்தனி விசாரணை நடத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT