முகப்பு
இந்தியா

அசாம்-மிசோரம் எல்லையில் இரு கிராம மக்களிடையே மோதல்

அசாம் - மிசோரம் மாநில எல்லையில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலகிறது. 

Updated On : 19 அக்டோபர், 2020 at 9:09 AM
பகிர்:

அசாம் - மிசோரம் மாநில எல்லையில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலகிறது. 

அசாமின் கொலாசிப் மாவட்டத்தின் கிராம மக்கள் மற்றும் மிசோரம் சச்சார் மாவட்டத்தின் கிராம மக்களிடையே நேற்றிரவு திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், தடிகளாலும் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் காயம் அடைந்தாக கூறப்படுகிறது. 

மேலும் குடிசைகளுக்கும் தீவைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. மரம் வெட்டுதல் தொடர்பாக இரு மாநில கிராம மக்களிடையே அவ்வப்போது மோதல் நடைபெறுவது வழக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கலந்தாலோசித்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.