ம.பி.யில் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு: உச்சநீதிமன்றத்தை நாடும் பா.ஜ.க.
மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன் முடிவுகள் நவம்பர் 10-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதிகளில் பிரசாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் அரசியல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்கள் கரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு எந்தவொரு அரசியல் பிரசாரத்திற்கும், தனிநபர் கூட்டத்திற்கும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
குவாலியர், குணா, மோரினா, பிந்த், அசோக் நகர், தாஷா, சிவ்புரி, ஷியோபூர், மற்றும் விடிஷா ஆகிய மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டத்திற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக முதல்வர் சிவராஜ்சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பேரணிகள் நடைபெறும் நிலையில், மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதி ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.