பிகார் மாநில துணை முதல்வருக்கு கரோனா தொற்று பாதிப்பு
பிகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM
பிகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிகார் மாநில துணை முதல்வரான சுஷில் குமார் மோடிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல்நிலை சீராக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.