சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் 
இந்தியா

'பாஜகவிலிருந்து ஏக்நாத் விலகியதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கும்'

பா.ஜ.க. மூத்தத் தலைவர் ஏக்நாத் கட்சே அக்கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு மிகப்பெரிய காரணம் இருக்க வேண்டும் என்று சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

DIN

பா.ஜ.க. மூத்தத் தலைவர் ஏக்நாத் கட்சே அக்கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு மிகப்பெரிய காரணம் இருக்க வேண்டும் என்று சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) அவர் கட்சியில் இணைய உள்ளார்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ராவத், ''இந்த காலகட்டத்தில் பாஜகவிலிருந்து விலகுவதாக கண்ணீருடன் ஏக்நாத் அறிவித்துள்ளதற்கு பின்னால் மிகப்பெரிய காரணம் இருக்கும். 40 ஆண்டுகளாக பாஜகவிற்காக உழைத்த நிலையில், தற்போது அவர் இந்த முடிவு எடுத்ததற்கு காரணங்கள் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கட்சே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தமது தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் அழிக்க முயல்வதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

காலித் ஜமில் தலைமையில் இந்திய கால்பந்தின் புதிய சகாப்தம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்களிக்காத 13 பேர் யார்?

2025-க்கான இபி-1 கிரீன் கார்டு விசா முடிந்தது: அமெரிக்கா

SCROLL FOR NEXT