இந்தியா

அருணாசலத்துக்கு விரிவுபடுத்தப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம்

DIN

புது தில்லி: அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2020 நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தை முதன் முறையாக அருணாச்சலப் பிரதேசத்துக்கு மத்திய அரசு விரிவுப்படுத்துகிறது.

பாப்பும் பரே மாவட்டத்தை தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை பணியில் வைத்திருக்கும் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்ட சட்டம் 1948- இன் கீழ் பயன்பெற தகுதியுடையவை ஆகும்.

www.esic.in என்னும் இணையதளத்திலும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஷ்ராம் சுவிதா தளத்திலும் தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தின் சேவைகளை பெறலாம். 

தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்ட சட்டத்தின் படி இதில் பதிவு செய்து கொள்வதற்கு எந்தவிதமான ஆவணங்களையும் நேரடியாக சமர்ப்பிக்கத் தேவையில்லை.

இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாதம் ரூ.21,000 வரை ஊதியம் பெறும் பணியாளர்கள் (மாற்றுத் திறனாளிகள் மாதம் ரூ 25,000 வரை ஊதியமாக பெறலாம்) தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள் ஆவர்.

கட்டணமில்லா மருத்துவ சேவைகள், நோய்க்கால பலன்கள், பேறுகால பலன், பணியின் போது காயமடைதல் பலன்கள், பணியின் போது அடைந்த காயத்தால் மரணமைடந்தால் குடும்பத்தினருக்கு பலன், வேலை இழத்தல் பலன் ஆகியவற்றை உறுப்பினர்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

SCROLL FOR NEXT