இந்தியா

தாராவியில் மேலும் 8 பேருக்கு கரோனா

DIN


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (திங்கள்கிழமை) 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தாராவியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒற்றை இலக்கில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அக்டோபர் 24 மற்றும் 25-இல் தலா 6 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,497 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதில் 3,047 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், 142 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2.5 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட தாராவியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT