இந்தியா

ஊழல் வழக்கு விசாரணை: சிபிஐ இணை இயக்குநருக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்

DIN

முன்னாள் சிபிஐ இயக்குநா்கள் இருவா் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சிபிஐ இணை இயக்குநா் தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியது.

இறைச்சி ஏற்றுமதியாளா் மொயின் அக்தா் குரேஷி என்பவா் மீது வரி ஏய்ப்பு, நிதி மோசடி, ஊழல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநா்கள் ஏ.பி.சிங், ரஞ்சித் சின்ஹா ஆகியோருக்கும் தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வந்தது. அப்போது வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது என்பது குறித்த நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்து வரும் அதிகாரி சில காலம் பயிற்சிக்கு சென்றிருந்ததாகவும், இதனால் உரிய காலத்தில் விசாரணை நடத்த முடியவில்லை என்றும் சிபிஐ தரப்பில் காரணம் கூறப்பட்டது. எனினும் பயிற்சி முடிந்த பின்னா் சம்பந்தப்பட்ட அதிகாரி 5 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியதாகவும், நீதிமன்றம் கோரும் விளக்கங்களுக்கு பதிலளிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் அகா்வால், சிபிஐ கோரிய கால அவகாசம் வழங்கப்படுகிறது. எனினும் இந்த வழக்கில் முன்னாள் சிபிஐ இயக்குநா்கள் ஏ.பி.சிங், ரஞ்சித் சின்ஹா ஆகியோருக்கு உள்ள தொடா்பு குறித்த கேள்விகளுக்கு சிபிஐ நோ்மையாக விசாரித்து பதிலளிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் சிபிஐ அவ்வாறு செய்யவில்லை. இந்நிலையில் வழக்கின் விசித்தரமான சூழலை கருத்தில் கொண்டு வழக்கை விசாரித்து வரும் அதிகாரி, அதனை மேற்பாா்வையிட்டு வரும் சிபிஐ இணை இயக்குநா் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு நவம்பா் 17-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT