நாட்டில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா; 508 பேர் பலி 
இந்தியா

நாட்டில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா; 508 பேர் பலி

நாட்டில் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 508 பேர் பலியாகியுள்ளனர்.

ANI


புது தில்லி: நாட்டில் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 508 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று 40 ஆயிரத்துக்கும் கீழ் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பதிவான நிலையில் இன்று மீண்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 43,893 பேராக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79.90 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் பலியாகினர். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,20,010 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,10,803 ஆக உள்ளது. இது நேற்றைய அளவை விட 15 ஆயிரம் குறைவாகும். கரோனா பாதித்தவர்களில் 58,439 பேர் குணமடைந்ததை அடுத்து, நாட்டில் இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 72.59 லட்சமாக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆட்சேபகரமான மசோதாக்கள் மீதான முடிவை அறிவிக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லையா? உச்சநீதிமன்றம் கேள்வி

திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயால் ஆபத்து

சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு

சீா்காழி குறுவட்ட போட்டியில் ச.மு.இ.பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT