கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் புதிதாக 5,062 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 5,062 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தில்லியில் புதிதாக 5,062 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 5,062 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,86,706 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,665 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 6,511 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,47,476 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 32,719 பேர் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் இன்று 44,330 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 46,80,695 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமரின் சகோதரியின் மீது முட்டை வீச்சு!

ஓணம் ரெடி... ஐஸ்வர்யா மேனன்!

தமிழ்நாட்டிற்கு ரூ. 13,016 கோடி முதலீடு ஈர்ப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 5.9.25

ஒளிவீசும் நிலா... ஐஸ்வர்யா லட்சுமி!

Madharasi review - கஜினி பாணியில் சிவகார்த்திகேயன்! அமரனை வெல்லுமா Madharasi? திரை விமர்சனம்

SCROLL FOR NEXT