முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கரோனா இறப்பு இல்லை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் கரோனாவுக்கு பலியாகவில்லை என்று அந்த மாநில சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
No fresh COVID-19 fatality in Jharkhand, tally rises to 1,01,287
பகிர்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் கரோனாவுக்கு பலியாகவில்லை என்று அந்த மாநில சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா பரவல் வேகமெடுத்த நிலையில், தற்போது அதன் தாக்கம் சற்று தணிந்து வருகின்றது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேர நிலவரத்தைச் சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்றைய நிலவரப்படி புதிதாக கரோனா தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை. ஆனால் மேலும் 323 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,01,287 ஆகவும் பலி எண்ணிக்கை 883 ஆகவும் உள்ளது. 

புதிய தொற்று ராஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த (109) பேருக்கும், தன்பாத் (35) பேருக்கும்,  கிழக்கு சிங்பும் (31) பேருக்கும் பதிவாகியுள்ளன. 

ஜார்க்கண்டில் தற்போது 5,196 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 95,208 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை அந்த மாநிலத்தில் 31,071 மாதிரிகளை அரசு பரிசோதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.