லோதி மின் மயானத்தில் பிரணாப் முகர்ஜியின் உடல் 
இந்தியா

அரசு மரியாதையுடன் பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல், தில்லி லோதி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

DIN

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல், தில்லி லோதி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், புது தில்லியில், 10, ராஜாஜி மார்க்கில் உள்ள இல்லத்தில் பிரணாப் முகர்ஜியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று பகல் 1 மணியளவில், பிரணாப் முகர்ஜியின் உடல் அவரது இல்லத்தில் இருந்து லோதி மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் உடல் எரியூட்டப்பட்டது. அவருக்கு கரோனா தொற்று இருந்ததால் கரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT