தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்
தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் இன்று புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியாதேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்
தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் இன்று புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புது தில்லி: தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் இன்று புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் மத்திய நிதித்துறை செயலா் ராஜீவ் குமாரை தோ்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுதொடா்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிக்கையில், அரசமைப்பின் 324-ஆவது பிரிவு உட்பிரிவின்(2)-படி ராஜீவ் குமாரை தோ்தல் ஆணையராக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளாா். அவா் தோ்தல் ஆணையராக பொறுப்பேற்பது முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1984-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் பிரிவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமாா், அசோக் லவாசாவின் ராஜிநாமாவை தொடா்ந்து தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாசா பணிபுரிய உள்ளாா். இதனால் தனது தோ்தல் ஆணையா் பதவியை அவா் கடந்த மாதம் ராஜிநாமா செய்ததையடுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு பதவியில் இருந்து விடைபெற்றார். அதனைத் தொடா்ந்து புதிய தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.