6 ஆண்டுகளில் 2,006 பாதுகாப்புப் படை வீரர்கள் விபத்தில் பலி 
இந்தியா

6 ஆண்டுகளில் 2,006 பாதுகாப்புப் படை வீரர்கள் விபத்தில் பலி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் படை வீரர்கள் 104 பேர் 2019-ம் ஆண்டும், 2,006 பேர் கடந்த 6 ஆண்டுகளிலும் விபத்தில் பலியாகியுள்ளனர் என தேசிய குற்றவியல் காப்பகம் தெரிவித்துள்ளது.

PTI

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் படை வீரர்கள் 104 பேர் 2019-ம் ஆண்டும், 2,006 பேர் கடந்த 6 ஆண்டுகளிலும் விபத்தில் பலியாகியுள்ளனர் என தேசிய குற்றவியல் காப்பகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படை வீரர்கள் 2019-ம் ஆண்டில் மட்டும் 104 பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதில், 14 பேர் பணியின்போது எதிரிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 6 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்புப் படையில் உள்ள 2,006 வீரர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதில், அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு 1,232 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அமைச்சகத்தின் கீழ் மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை, சாஸ்திர சீமா பால், அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய 7 படைகள் உள்ளது.

இந்தப் படைகளில் 9,23,800 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் எல்லைப் பாதுகாப்பு, மத்திய மற்றும் மாநிலங்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT