இந்தியா

விதவைப் பெண்களுக்கு கணவரின் சொத்தில் சம உரிமை: வங்கதேசம்

DIN

வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த விதவைகள் கணவரின் சொத்துக்களில் பங்குபெற தகுதியுடையவர்கள் என்று வங்கதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு முன்பு இந்து விதவைகள் கணவரது வீட்டின் மீது மட்டுமே உரிமை கொண்டவர்களாகவும், நிலம் உள்ளிட்ட சொத்துகளுக்கு உரிமை மறுக்கப்பட்டும் வந்தது. இதனிடையே உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய மனித உரிமை ஆர்வலர், உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு சிறிய முன்னேற்றம் மட்டுமே இது ஒரு சாதனையல்ல என்று கூறினார்.

இது குறித்து பேசிய சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான தீப்தி சிக்தர், இந்த தீர்ப்பு ஆண் - பெண் இடையே சமத்துவத்தை கொண்டுவரும் முயற்சியின் முதல் படி முன்னேற்றம். ஆனால் பெண்களுக்கு சம உரிமையை பெற்றுத்தருவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்து மதத்தலைவர்கள் இந்து விதவைப் பெண்களுக்கு தேவையானவற்றை அளிக்கும் ஆதரவு மனப்பான்மையில் செயல்பட்டதில்லை. மனித உரிமை ஆர்வலர்களின் 50  ஆண்டுகால போராட்டத்தால் மட்டுமே இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு சாத்தியமாகியுள்ளது. 

கவிஞரும், செயல்பாட்டாளருமான பேகம் சூபியா கமல் போன்ற பெண்கள் சமுதாயத்தில் மேலும் முன்னேற்றத்தை நோக்கி வரவேண்டும் என்பதே விருப்பம் என்று கூறினார்.

இந்து புத்த கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ராணா தாஸ் குப்தா, பெண்களுக்கு ஆதரவான தீர்ப்பை வர்வேற்பதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT