இந்தியா

கரோனா: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 62% பேருக்கு சிகிச்சை

DIN

நாட்டில் தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் 62 சதவிகிதத்தினர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயர் ராஜேஷ் பூஷண் பேசியதாவது, நாட்டின் மொத்த பாதிப்பில் 62 சதவிகிதத்தினர் தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வாரமொருமுறை ஆந்திரத்தில் கரோனா தொற்றுக்கு இறப்போர் விகிதம் 4.5 சதவிகிதமாக உள்ளது. மகாராஷ்டிரத்தில் 11.5 சதவிகிதமாகவும், தமிழகத்தில் 18.2 சதவிகிதமாகவும் உள்ளது. தில்லி மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மேலும் கரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தில்லியில் 50 சதவிகிதமும், கர்நாடகத்தில் 9.6 சதவிகிதமும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

தேசிய அளவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது தொற்று பரவலும், இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது. 

சுதாகாரத்துறை பணியாளர்களுக்கும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தெலங்கானாவில் 16 சதவிகிதமும், மகாராஷ்டிரத்தில் 14 சதவிகிதமும், கர்நாடகத்தில் 13 சதவிகிதமும், புதுச்சேரியில் 12 சதவிகிதமும், பஞ்சாபில் 11 சதவிகிதம் சுகாதாரத்துறை பணியாளர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT