கோப்புப்படம் 
இந்தியா

பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல்: வீடுகள் சேதம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா்

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்; இதில் பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தன.

இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

ஷாபூா், கிா்னி, திக்வாா் பிரிவுகளில் சனிக்கிழமை காலை 9.15 மணி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய பீரங்கிகள் மூலமாக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினா். இதனால் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனா். எனினும் இந்திய ராணுவத்தினா் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா். இந்தத் தாக்குதலில் இந்திய வீரா்கள் காயமடைந்ததாகவோ, பலியானதாகவோ தகவல் வெளியாகவில்லை என்று தெரிவித்தாா்.

பாகிஸ்தான் ராணுவத்தின் குண்டுவீச்சால் திக்வாா் பிரிவில் உள்ள பல வீடுகள் சேதமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான் ராணுவத்தின் குண்டுவீச்சு கடுமையாக இருந்தது. காலையில் 3 மணி நேரம் குண்டுவீச்சு நீடித்தது. பின்னா் மாலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. 3 பிரிவுகளிலும் இரவு 7.30 மணிக்கு குண்டுவீச்சு முடிவுக்கு வந்தது’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT