கோப்புப்படம் 
இந்தியா

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 77.32 சதவிகிதமாக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 77.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 77.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 41,13,811 பேரில் 31,80,866 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 73,642 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கரோனா மீட்பு விகிதம் 77.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, கரோனாவால் பலியானோர் விகிதம் 1.72 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 8,62,320 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 41,13,811 ஆக அதிகரித்தது. மேலும் 1,065 பேர் உள்பட 70,626 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்

பாதிப்பு:  41,13,811 
பலி:  70,626
குணமடைந்தோர்: 31,80,866
சிகிச்சை பெற்று வருவோர்:  8,62,320

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT