இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 553 காவலர்களுக்கு கரோனா: மேலும் 3 பேர் பலி

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 553 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 காவலர்கள் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 553 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 17,972-ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,523 காவலர்கள்  தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 14,269 காவலர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். புதிதாக மேலும் 3 காவலர்கள் உயிரிழந்ததால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 180-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

SCROLL FOR NEXT