இந்தியா

இந்திய மாதுளை இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா முதல் முறையாக அனுமதி

DIN


இந்திய மாதுளை பழம் இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதா் பேரி ஓ ஃபாரெல் வியாழக்கிழமை கூறியதாவது:

இருநாட்டு அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஆஸ்திரேலிய-இந்திய வேளாண் உறவு மற்றொருமொரு சாதகமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மாதுளைக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.

இதனை இந்திய இறக்குமதி ஈடு செய்யும். ஆஸ்திரேலியா ஏற்கெனவே மாதுளையை கணிசமான அளவில் உற்பத்தி செய்தாலும், அது போதுமானதாக இல்லை.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய சந்தைகளில் ஏற்படும் பற்றாக்குறையை போக்க இந்திய இறக்குமதி உதவும். அதேபோன்று, இருவழி வேளாண் வா்த்தக உறவின்படி, ஆஸ்திரேலியாவின் வால்நட், பாதாம், மால்ட் பாா்லியிலிருந்து தயாரிக்கப்படும் பீா் உள்ளிட்ட பொருள்களை இந்தியா இறக்குமதி செய்து கொள்ள முடியும்.

இந்திய மாதுளை இறக்குமதியின்போது ஆஸ்திரேலிய இறக்குமதியாளா்கள் சில உயிா்பாதுகாப்பு நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்திய மாம்பழம், திராட்சை ஆகியவற்றின் இறக்குமதிக்கு ஆஸ்திரேலிய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT