இந்தியா

கேரளத்தில் ஒருலட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

DIN

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,349 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கேரளத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''இன்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி புதிதாக 3,349 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 99,266- ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1,657 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 72,578-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 26,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 396-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT